இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்
- இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அலுவலர் கூறினார்.
- நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பள்ளியின் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத மாணவர்களைச் சேர்ப்பதற்கு 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர்சேர்க்கை 20.04.2023 முதல் 18.05.2023 வரை இணைய வழியில் நடைபெற உள்ளது.
பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையமுகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் குழந்தை யின் வயது 31.7.2023 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 4 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
அதாவது 1.8.2019 முதல் 31.7.2020-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் 5 பள்ளி களுக்கு விண்ணப்பி க்கலாம்.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தை களை சேர்ப்பதற்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கு வதற்காக அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும் உதவி மையம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணையவழி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
உதவி மைய ஆலோ சகர்களாக கோபால், மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்) தொலைபேசி எண் 76399 54011 நியமனம் செய்யப்ப ட்டுள்ளார். உதவி வேண்டு வோர் அலுவலக நேரங்க ளில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.