உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவிகள்-இளம் பெண் உள்பட 5 பேர் மாயம்

Published On 2023-07-19 07:46 GMT   |   Update On 2023-07-19 07:46 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள்-இளம் பெண் உள்பட 5 பேர் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தம்பி மகள் நகரிகா (21). இவரை ஜெயலட்சுமி தனது வீட்டில் பராமரித்து வந்தார். சிவகாசி ரோட்டில் உள்ள கல்லூரியில் நகரிகா எம்.பி.ஏ. படித்து வருகிறார். தினமும் ஜெயலட்சுமியின் கணவர் நகரிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற நகரிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. கல்லூரியை தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாபட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் ஆனைக்கு ட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிராமி (19). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பூலாங்கால் பகுதியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மகள் இந்திரா (19). பிளஸ்-2 முடித்து விட்டு வெளியூரில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார். சிவமணி அதனை கண்டித்து சிம்கார்டை எடுத்து வைத்து கொண்டார். இந்த நிலையில் திடீரென அபிராமி மாயமானார். பின்னர் அவரது தாயாரின் செல்போனில் என்னை தேட வேண்டாம் என செய்தி அனுப்பியிருந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது அதில் பேசிய நபர் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என கூறி ஒரு பெண் தன்னிடம் செல்போனை வாங்கி செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். பின்னர் அந்த பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்ட போது அந்த பெண் தஞ்சாவூரில் இறங்கி சென்று விட்டதாக கூறியுள்ளார். பரலச்சி போலீசில் சிவமணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் அனுசுயா. இவரது மகன் முத்துப் பாண்டி. ராணுவத்தில் பணிபுரிகிறார். மருமகள் துர்கா (27), பேத்தி ஹரிப்பிரியா(4) அனுசுயாவுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள கணவரின் சகோதரி சகுந்தலா வீட்டிற்கு செல்வதாக கூறி மகளுடன் துர்கா சென்றார். ஆனால் அவர் பெங்களூருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் காளீஸ்வரி (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெளியே புறப்பட்ட பெற்றோரிடம் படிப்புக்காக செல்போன் வேண்டும் என வாங்கி வைத்துள்ளார். மீண்டும் அவர் திரும்பி வந்து பார்த்த போது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் கற்பகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News