உள்ளூர் செய்திகள் (District)

தொழில்முனைவோர் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி, துணி நூல் ஆணையர் வள்ளலார் ஆகியோர் பங்கேற்றனர்.

தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை

Published On 2022-12-17 08:03 GMT   |   Update On 2022-12-17 09:56 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடந்தது.
  • இந்த கூட்டத்தில் துணி நூல் ஆணையர்-கலெக்டர் பங்கேற்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் ஜவுளி தொழில் முனை வோர்களிடையே விழிப்பு ணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார்.

இதில் துணி நூல் ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கி பேசியதா வது:-

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் இ.குமாரலிங்காபுரத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. தமிழ்நாடு அரசு துணி நூல் துறையின் மூலம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை வளப்படுத்தும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கான ஆலோச னைகளை தொழில்முனை வோர்கள் வழங்கலாம்.தமிழ்நாட்டை ஜவுளி துறையில் முக்கியமாக தொழில்நுட்ப ஜவுளித்துறையை வளர்ச்சி அடைய செய்திட கடந்த மாதம் சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட International Technical Textile - Conference இதற்கு ஒரு உதாரணமாகும்.

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உகந்த இடமாக இருப்ப தற்காகவும், அதிக அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், ஜவுளி உற்பத்தியை பெருக்கி, உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக வும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் துணி நூல் இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ், மண்டல துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News