உள்ளூர் செய்திகள்

கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கொடிகளை மாணவிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

வீடு, வீடாக தேசிய கொடிகள் வழங்கல்

Published On 2022-08-14 09:20 GMT   |   Update On 2022-08-14 09:20 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் 2 கிராமங்களில் வீடு, வீடாக தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.
  • ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிக வியல் துறையின் விரிவாக்க பணி சார்பில் "இல்லம் தோறும் தேசிய கொடி" என்ற நிகழ்ச்சி அ.மீனாட்சிபுரம் மற்றும் ஆணைக்குட்டம் கிராமங்களில் நடந்தது.

75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையிலும், தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவை நினைவு கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட 2 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளி லும் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.

730-க்கும் அதிகமான வீடுகள் உள்ள இந்த கிராமங்களில் இல்லம் தோறும் தேசிய கொடி என்ற நிகழ்ச்சி கிராம மக்களிடையே பெரும் வர வேற்பை ஏற்படுத்தியது.

கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கொடிகளை மாண வர்களுக்கு வழங்கி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இளங்கலை வணிகவியல் துறையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்களும், துறை பேராசிரியர்களும் தன்னார்வமாக இந்த நிகழ்ச்சியை செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.

Tags:    

Similar News