உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் அரசு உதவிகளை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

Published On 2023-04-06 08:00 GMT   |   Update On 2023-04-06 08:00 GMT
  • விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அரசு உதவிகளை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மூலம் 1.4.23 முதல் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயி கள் விபரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விபரம் - இனங்கள் குறித்து அறிந்துகொள்ள இயலும்.

இதில் முக்கியமாக நில விபரங்களுடன் இணை க்கப் பட்ட விவசாயிகள் விபரம் அறிந்திட உருவாக்கப் பட்டுள்ள GRAINS வலை தளத்தில் பேரிடர் மேலா ண்மை துறை, வருவாய் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப் பட்டுள்ளதால் அரசு திட்டங்களின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.

மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயி கள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன் பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறலாம். விவசாயிகள் தாங்கள் இது வரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம். திட்டங்களின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News