கபடி போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- கபடி போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
- இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மின்னொளி விளையாட்டு அரங்கில் நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட தலைவர் கபடி சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். கோவில்பட்டி தொழில் பிரமுகர் வெங்கடசுப்பிரமணிய ராஜா, கவுன்சிலர் சோலைமலை, அரிமா சங்கம் சார்பில் ராம் சிங் மற்றும் சிவக்குமார், முத்துராமலிங்க பாண்டியன், விளையாட்டு மன்ற செயலாளர் கனி முத்து குமரன் உள்பட பலர் பேசினர்.
விளையாட்டு மன்ற பொருளாளர் சம்சுதீன் வரவேற்றார். முன்னணி விளையாட்டு வீரர் காளிதாஸ் தொகுத்து வழங்கினார். முதலாவது போட்டியாக முகவூர் நண்பர்கள் அணியும், வத்திராயிருப்பு அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது.