உள்ளூர் செய்திகள்

மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு-அமைச்சர் தகவல்

Published On 2023-07-09 07:13 GMT   |   Update On 2023-07-09 07:13 GMT
  • சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
  • விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ெரயில்வே கேட் மூடப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை பரிசீலித்து ெரயில்வே கேட் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இந்த சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனையூர் கிராமங்களில் 2818 ச.மீ. நிலங்களை கையகப்படுத்தும் பணி வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் நிலம் மற்றும் கட்டுமானங்களுக் குரிய இழப்பீட்டு தொகையை தொடர்புடைய நில உடைமையாளர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரூ.5 கோடியே 60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நில உடைமையாளர்க ளுக்கான இழப்பீட்டு தொகை இம்மாத இறுதிக் குள் உரிய நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப் படும் எனவும், விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News