உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா
- ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
- விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பூப்பல்லக்கு, சிம்ம வாகனம் என பல்வேறு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவையொட்டி தீ குண்டம் வளர்க்கப்பட்டது.
பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் ஊர்வலமாகச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.