உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

Published On 2023-04-17 07:07 GMT   |   Update On 2023-04-17 07:07 GMT
  • அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
  • இந்த பயிற்சி வகுப்பை விருதுநகர் கலெக்டர் பார்வையிட்டார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2-வில் சிறப்பாக படித்த 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

பின்னர் அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

பயிற்சி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரில் பயின்று வரும் 4 மாணவர்கள், தாங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற விதம், அதற்காக தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டனர்?, படிப்பதற்கான வழிமுறைகள், தேர்வை கையாண்ட முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பயிற்சி மைய ஒருங்கி ணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News