உள்ளூர் செய்திகள் (District)

பெரியமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

Published On 2023-03-23 08:53 GMT   |   Update On 2023-03-23 08:53 GMT
  • பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது.
  • தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெறும். குறிப்பாக விழா வையொட்டி நடைபெறும் பூக்குழி நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10- ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி இரவு பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதன்படி 3-ம் நாள் விழாவில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலத்திலும், 6-ம் நாள் விழாவில் கிருஷ்ணர் அலங்காரத்திலும் பெரிய மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.

நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்கரத்தில் எழுந்தருளினார். பின்னர் பக்தி கோஷங்கள் முழங்க பெண்கள் உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

Tags:    

Similar News