உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் சிறப்பு விரிவுரை

Published On 2023-02-04 07:35 GMT   |   Update On 2023-02-04 07:35 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
  • உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறும செயலரியல் துறை ''உன்னுள் இருக்கும் திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வின் நோக்கமானது மாணவர்களிடையே திறனை மேம்படுத்து வதாகும்.

விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரி முனைவர் காந்திமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் திறனை வளர்ப்பதின் முக்கியத்துவம் பற்றியும், தலைமைத்துவ திறனை வளர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

சிறந்த குழுவை அமைக்கும் முறை, குழு தலைவரின் தகுதிகள் மற்றும் கூட்டாக செயல்படும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தார். துறைத் தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

Tags:    

Similar News