உள்ளூர் செய்திகள்

புதிய வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கும்- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

Published On 2023-11-16 07:17 GMT   |   Update On 2023-11-16 07:17 GMT
  • மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
  • ராஜபாளையத்தில் மோட்டார் வாகன அலுவலகம் திறக்கப்பட்டது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி ரோட்டில் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய பகுதி அலுவல கத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த பயனா ளிக்கு புதிய அலுவலகத்தின் மூலம் முதல் பழகுநர் உரி மத்தை அவர்கள் வழங்கி னார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் பேசுகையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், ஒவ்வொரு திட் டங்களையும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யிலும், பெண்களின் முன் னேற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுத்தி வருகிறார்.

ராஜபாளையம் பகுதி மக்கள் முன்பு போக்கு வரத்துத்துறை சார்ந்த பணி களுக்காக கிருஷ்ணன் கோவில் அலுவலகம் வரை செல்ல வேண்டி இருந்தது. பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, ராஜபாளை யம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடர் முயற்சி மேற்கொண்டதின் பலனாக அமைச்சரின் உறுதுணையுடன் போக்கு வரத்துறை மூலம் தற்போது மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக கலைஞரின் மகளிர் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான வர்களுக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

விண்ணப்பம் செய்துள்ள வர்களில் தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாத வண்ணம் அதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றது என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமை பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என பெண்களின் பொருளா தார ரீதியான முன்னேற்றத் திற்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையி லான அரசிற்கு அனைவரும் உறுதுணையாகஇருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், ராஜ பாளையம் நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம், துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News