வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி
- வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழக அரசு உத்தரவின்படி 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களும் திறந்து வைக்கும் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடவும், அதன் விவரம் படிவம் 5-ல் வெளிக்காட்டி வைத்தும், பணியாளர்கள் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்குமிகாமலும், மிகைநேரம் பணி பார்க்கும் நேரத்தில் வேலை நேரம் 10 சதவீத மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வாரத்தில் மொத்தம் வேலை நேரம் 57 மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மேற்படி நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் இரவில் பணிபுரிய அவர்களின் சம்மத கடிதம் பெற்றும் அவர்களின்
பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பெண் பணியாளரிடம் இருந்து பெறப்படும் புகார்களை விசாரணை செய்ய உள்ள விசாரணை கமிட்டி அமைத் தும் அவர்களை வேலை முடிந்தவுடன் வீட்டில் இறக்கிவிட போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அனுமதி இல்லை அனைத்து பணியாளர்க ளின் ஊதியம் மற்றும் மிகை ஊதியம் அனைத்தும் வங்கியில் மட்டுமே செலுத்தவேண் டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் பின்பற்றாத 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் வாரத்தில் அனைத்து நாட் களும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது 1947-ம் வருட கடைகள் நிறுவனச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.