மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு
- விருதுநகர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு கூட்டம் நடந்தது.
- இதில் செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில், மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழை நீரை சேகரிக்க நடைபெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, அலுவலர்களுடன் இணைந்து, அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு பணிகளான தடுப்பணை கட்டும் பணிகள், குடிமராமத்து செய்யப்பட்ட ஊரணிகள், மழை நீரை உறிஞ்சும் அகழிகள், நீரினை மறுசுழற்சி செய்யும் வடிவமைப்புகள் ஆகியவற்றை மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வுகளின் போது ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஜமீர் பகவான், செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.