உள்ளூர் செய்திகள்
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின் போது முருகன் தேர் மீது கொடி கட்டிய வாலிபர் யார்?
- ஆனித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 11-ந் தேதி நடந்தது.
- டவுன் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ந் தேதி நடந்தது. அன்றைய தினம் 5 தேர்களும் ரதவீதிகளில் வலம் வந்து நிலையம் வந்தடைந்தது.
அப்போது சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு நின்று கொண்டிருந்த முருகன் தேர் மீது ஏறி வாலிபர் ஒருவர் சமுதாய கொடி ஒன்றை கட்டியதுடன் சமுதாயத் தலைவர்கள் புகைப்படம் பொறிக்கப்பட்ட தனது மேலாடை ஒன்றையும் அதில் வைத்து ஆட்டம் போட்டு உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் டவுன் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.