உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: பூஜை பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் விரக்தி

Published On 2022-08-30 09:28 GMT   |   Update On 2022-08-30 09:28 GMT
  • கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பூஜை பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் விரக்தி உள்ளனர்.
  • விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர்.

கடலூர்:

தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் மழையும், பகல் நிலவு சுட்டெரிக்கும் வெயிலும் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் , நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வேப்பூர், விருத்தாச்சலம், புவனகிரி, தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, குப்பநத்தம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தன. இதை தொடர்ந்து இன்று காலை வரை கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக நாளை விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் படைப்பதற்கு பூஜை பொருட்கள் சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த தொடர் மழை காரணமாக பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவற்றை மழை காரணமாக விற்க முடியாமல் சாலை வியாபாரிகள் கடும் அவதி அடைந்ததை காண முடிந்தது. மேலும் இந்த பொருட்கள் மற்றும் பழ வகைகள் இன்று, நாளை இரண்டு நாட்களில் விற்பனையானால் மட்டுமே வாங்கி பொருட்களுக்கு பணம் வழங்கி ஏதேனும் சிறிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த நிலை தொடர்ந்து இருந்தால் எங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர் வியாபாரிகள். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- குப்பநத்தம் - 44.3வேப்பூர் - 37.0தொழுதூர் - 27.0விருத்தாசலம் - 14.1புவனகிரி - 6.0ஸ்ரீமுஷ்ணம் - 5.6 அண்ணாமலைநகர் - 1.4பரங்கிப்பேட்டை - 1.2 கடலூர் - 0.1மொத்த மழை - 136.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News