கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா
- கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
- ஆயுதங்களாக கொண்டு தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கொடி நநாட்ட வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் விழாவில் தொடக்க உரையாற்றினார். அவர் பேசும் போது பெண்கள் நன்கு கல்வி கற்று, தனித்திறன் வளர்க்கும் பயிற்சி பெற்றவளாக தேர்வில் தேர்வாகி உலகம் வியக்கும் உன்னத பெண்களாக உருவாக வேண்டும் என வாழ்த்தினார்.
விழாவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி முதல்வர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர் பேசும்போது பெண்கள் என்றுமே வலிகளை தாங்கும் வல்லனை கொண்டவர்களாக விளங்கு கிறார்கள்.
நவீனயுகத்தில் கல்வி, தன்னம்பிக்கை ஆகியவற்றை ஆயுதங்களாக கொண்டு தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கொடி நநாட்ட வேண்டும் என்றார்.
உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருப்பதாகவும், அதை போல மாணவிகளும் வளர வேண்டும் என்றார்.
விழாவில் துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவிகள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.