உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், உதவி தலைவர் சுரேஷ் ஆகியோர் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி நிற்கும் காட்சி.

சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலையில் உலக ஓசோன் தின நிகழ்ச்சி - மரக்கன்றுகள் நடப்பட்டன

Published On 2022-09-17 09:04 GMT   |   Update On 2022-09-17 09:04 GMT
  • டி.சி.டபிள்யூ நிர்வாகத்தின் சார்பில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார். உற்பத்தி பிரிவு உதவி தலைவர் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார். உலக வெப்பமயமாதலை தடுத்து ஓசோன் படலத்தை பாதுகாப்பதில் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ள கடமைகளைப் பற்றி கருத்தரங்கம் நடந்தது.

தொடர்ந்து நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டை தவிர்ப்பதற்கான உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் சுற்றுச் சூழல் துறை, சிவில் துறை மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News