ஆலங்குளத்தில் போலி பீடி பண்டல்கள் கடத்திய வாலிபர் கைது
- ஆலங்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். உடனே வேனில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார்.
நெல்லை:
ஆலங்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
போலி பீடி
அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். உடனே வேனில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். இதனால் போலீசார் டிரைவரை பிடித்து வைத்துக்கொண்டு வேனை சோதனை செய்தனர்.
அப்போது அதில் ஏராளமான பண்டல்களில் பீடி கட்டுகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அவை போலியான லேபிள் ஒட்டி கேரளாவிற்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது.
கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவரான செங்கோட்டை அருகே உள்ள கோட்டை வாசலை சேர்ந்த சந்தோஷ்(வயது 34) என்பவரை கைது செய்தனர்.
வேனில் இருந்த 2,800 பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய குருவன்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.