- இயற்கையின் ஒரு விநோதமான, ஆனால் இயல்பான அம்சமாகும்.
- இயற்கையின் இந்த அமைப்புக்குப் பின் வலுவான காரணம் உண்டு.
பெண்கள் கருணையே வடிவானவர்கள் என்று நினைப்பீர்கள். ஒரு வேளை மனிதப் பெண்களில் பெரும்பான்மை அப்படி இருக்கலாம்! மறுக்கும் ஆண்கள் சற்று பொறுமை காக்கவும்!
ஆனால் பல உயிரினங்களில் பெண்கள் கலவிக்குப் பிறகு தன் இணையை கொன்று தின்றுவிடும்.
நமக்கு இது கொடுரமான செயலாக தோன்றலாம்! ஆனால் இயற்கையின் இந்த அமைப்புக்குப் பின் வலுவான காரணம் உண்டு.
சில் உதாரணங்களைப் பார்ப்போம்!
1. கருந்தலை சிலந்தி (பிளாக் விடோ ஸ்பைடர்): பெண் சிலந்தி, இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆண் சிலந்தியை உண்ணுகிறது. இதனால்தான் இந்த இனத்திற்கு "விதவை" என்ற பெயர் வந்தது.
2. கும்பிடு பூச்சி (ப்ரேயிங் மாண்டிஸ்): பெண் கும்பிடு பூச்சி , இணைவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ ஆண் கும்பிடு பூச்சியின் தலையை கடித்து உண்ணுகிறது.
3. மின்மினிப்பூச்சி (ஃபயர்ஃப்ளை): சில இனங்களில், பெண் மின்மினிப்பூச்சி ஆணை ஈர்த்து, பின்னர் அதை உண்ணுகிறது.
4. பச்சை வயல் சிலந்தி (கிரீன் லின்க்ஸ் ஸ்பைடர்): பெண் சிலந்தி பெரும்பாலும் இனப்பெருக்கத்தின் போதோ அல்லது உடனடியாக அதற்குப் பின்னரோ ஆணைச் சாப்பிடுகிறது.
5. தேள் (ஸ்கார்பியன்): சில இனங்களில், பெண் தேள் இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆண் தேளை உண்ணுகிறது.
கலவி தொடங்கியபின் ஆண் தலையை பறிகொடுத்தாலும் கலவி தொடரும்!
இந்த நடத்தை பெரும்பாலும் உணவுக்காகவும், அடுத்த தலைமுறைக்கு அதிக ஊட்டச்சத்து கிடைப்பதற்காகவும் நடைபெறுகிறது. இது இயற்கையின் ஒரு விநோதமான, ஆனால் இயல்பான அம்சமாகும்.
-அருள் குமார்