கதம்பம்

மன்னர் கொடுத்த பதிலடி

Published On 2024-08-30 11:18 GMT   |   Update On 2024-08-30 11:18 GMT
  • ஊழியர்கள் இவர் ஒரு மன்னர் என்பதை அறியாமல் இவருக்கு அனுமதி மறுத்தனர்.
  • ஜோத்பூர் நகரின் குப்பைகளை சுத்தம் செய்ய இந்த கார்களையே பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

இந்தியாவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த காலத்தில் விஜய் சிங் ரத்தோர் என்பவர் ராஜஸ்தான் மார்வார் இராச்சியத்தின் அரசனாக இருந்தார்.

ஒரு முறை இவர் விக்டோரியா ராணியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து சென்றார். ஒரு நாள் சாதரண உடையில் லண்டன் வீதியில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோவ்ரூமுக்குச் சென்று கார்களின் விலைகளை விசாரிக்க நினைத்தார்.

அப்பொழுது அங்கிருந்த ஊழியர்கள் இவர் ஒரு மன்னர் என்பதை அறியாமல் இவருக்கு அனுமதி மறுத்தனர்..

இதனால் கோபமுற்ற விஜய் சிங் ரத்தோர் தனது ஓட்டல் அறைக்கு சென்று அரச உடையை அணிந்து கொண்டு மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு சென்றார். அப்போது அதே ஊழியர்கள் அவருக்கு உபசாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.

ராஜா விஜய் சிங் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார். ராஜஸ்தான் திரும்பிய பிறகு, ஜோத்பூர் நகரின் குப்பைகளை சுத்தம் செய்ய இந்த கார்களையே பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அதனை புகைப்படம் எடுக்கவைத்து அவற்றை லண்டன் செய்தித் தாள்களுக்கு அனுப்பி வைத்தார்.

உலகின் தலைசிறந்த கார்களாகக் கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஒரு காலனி நாடான இந்தியாவில் நகரக் கழிவு வாகனமாக பயன்படுத்தப்படும் செய்தி பரவியதால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தினர் ஆடிப்போயினர்.

நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் லண்டனில் இருந்து விரைந்து சென்று ராஜாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பின்னர் அந்த கார்களை திருப்பி வாங்கிக்கொண்டு அவற்றுக்கு பதிலாக வேறு கார்களையும் வழங்கிவிட்டுச் சென்றனராம்.

-பி.சுந்தர்

Tags:    

Similar News