செய்திகள் (Tamil News)

பஹ்ரைன் மன்னருடன் ராகுல் காந்தி சந்திப்பு

Published On 2018-01-08 08:51 GMT   |   Update On 2018-01-08 08:51 GMT
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பஹ்ரைன் நாட்டுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி பஹ்ரைன் மன்னரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி அனைத்து மாநிலங்களிலும் கட்சி அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக மேலிட நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த பதவியை ஏற்ற பின்னர் பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ராகுல் காந்தி நேற்று பஹ்ரைன் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பின் சார்பில் பஹ்ரைனில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று கலந்து கொள்கிறார். இவ்விழாவில் சுமார் 50 வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி பிரபலங்களும் பங்கேற்கின்றனர். 

இந்திய வம்சாவளி தொழில் அதிபர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி, பஹ்ரைன் அரசின் விருந்தினராக அங்கு சென்றுள்ளதாகவும், பஹ்ரைன் மன்னர் ஹமாஸ் பின் ஈசா அல் கலிபா-வை அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  #tamilnews

Similar News