செய்திகள்
திருவனந்தபுரத்தில் திருநம்பி இஷான்-திருநங்கை சூர்யா திருமணம் நடந்த காட்சி

கேரளாவில் முதல் முறையாக திருநம்பி-திருநங்கை திருமணம்

Published On 2018-05-11 04:45 GMT   |   Update On 2018-05-11 04:45 GMT
கேரளாவில் முதல் முறையாக சிறப்பு திருமண திட்டத்தின் கீழ் திருநம்பியும்- திருநங்கையும் சட்டப்பூர்வ திருமண பந்தத்தில் இணைந்தனர்.#LGBT #LGBTQ #trans
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது கபீர். இவரது மனைவி ‌ஷனிபா. இவர்களின் மகள் இஷான். திருநங்கையான இஷான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபரே‌ஷன் மூலம் ஆணாக மாறினார்.

இதுபோல திருவனந்தபுரம் பாட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன்-உஷா தம்பதியின் மகன் சூர்யா. திருநங்கையான இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.

கேரள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா காமெடி வேடங்களில் தோன்றி நடித்தார். இதுதொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அப்போது பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி இஷானை சந்தித்தார்.

இதில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் சாதாரண மனிதர்களைபோல திருமண வாழ்க்கையில் நுழைய விரும்பினர். இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

பெற்றோர் சம்மதம் கிடைத்ததும் இஷான்-சூர்யா இருவரும் திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இவர்களின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள மன்னம் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.

இஷான் மணமகனுக்குரிய கோட்-சூட் அணிந்து கம்பீரமாக வந்தார். சூர்யா, பட்டுச்சேலை கட்டி ஆபரணங்கள் அணிந்து மணப்பெண்ணாக வந்தார். அவர், மணமேடைக்கு வந்த போது, கூடியிருந்தவர்களும், மணமக்களின் நண்பர்களும் பாட்டு பாடியும், நடன மாடியும் வரவேற்றனர்.



மணமேடையில் மணமக்கள் அமர்ந்ததும் திருமண சடங்குகள் நடந்தது. மத சடங்குகள் போல் இல்லாமல் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும் சடங்கு மட்டும் நடந்தது. சூர்யா கழுத்தில் இஷான் தாலிகட்டியதும் அங்கு கூடியிருந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் இதுபோன்ற திருமணம் முதல் முறையாக நடந்ததால் கேரள சுற்றுலாத் துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. சீமா உள்ளிட்ட பிரமுகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

நாங்களும், மனிதர்கள் தான். இயற்கையோடு இணைந்து வாழ விரும்பு கிறோம். சாதாரண மனிதர் களைபோல நாங் களும் திருமண வாழ்க்கை நடத்த லாம் என்பதை எங்களை போன்றவர்களுக்கு எடுத்துக் காட்டவே இந்த திருமணத்தை விமரிசையாக நடத்தினோம். இது, பிற திருநங்கையர்- திருநம்பியருக்கு முன் உதாரணமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருநம்பி-திருநங்கை இஷான்-சூர்யா ஜோடியுடன் திருமணத்திற்கு வந்தவர்கள் செல்பி எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.#LGBT #LGBTQ #trans
Tags:    

Similar News