செய்திகள்

டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Published On 2018-05-11 07:52 GMT   |   Update On 2018-05-11 07:52 GMT
டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #UpendraRai
புதுடெல்லி:

டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர்.

இவ்விவகாரத்தில், லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

இந்நிலையில், நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உபேந்திரா ராய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், டெல்லி மற்றும் நொய்டா உட்பட பல இடங்களில் உள்ள உபேந்திரா ராய்க்கு சொந்தமான பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். #UpendraRai
Tags:    

Similar News