செய்திகள் (Tamil News)

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

Published On 2018-05-12 13:48 GMT   |   Update On 2018-05-12 13:48 GMT
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என இன்றைய வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. #KarnatakaElection #ExitPolls #congressparty
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.

அதன்படி, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என குறிப்பிடுகின்றன.

இதேபோல், சில ஊடகங்கள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் என யூகித்துள்ளன.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை இழக்கும் வேளையில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க இந்த கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கும் முயற்சிக்கலாம் என கருதப்படுகிறது. #KarnatakaElection #ExitPolls #congressparty
Tags:    

Similar News