செய்திகள்

காஷ்மீரில் சிஆர்பிஎப் வேன் மோதி போராட்டம் நடத்திய இளைஞர் பலி - போலீஸ் வழக்குப்பதிவு

Published On 2018-06-02 08:16 GMT   |   Update On 2018-06-02 08:16 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று சிஆர்பிஎப் வேன் மோதி போராட்டம் நடத்திய இளைஞர் பலியான விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், சிஆர்பிஎப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #CRPF #Kashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று இளைஞர்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது இளைஞர்கள் கல் எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது சிஆர்பிஎப் வேன் ஒன்று மோதியதில் ஒரு இளைஞர் பலியானார்.

மேலும், ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். வீரர்கள் தங்களை தற்காத்து கொள்ளவே வாகனத்தை திருப்பினர். ஆனால், அதில் இளைஞர்கள் சிக்கிவிட்டதாக சிஆர்பிஎப் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் போலீசார் சிஆர்பிஎப் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
Tags:    

Similar News