செய்திகள்

பாலக்காடு அருகே மாயமான போலீஸ்காரர் உடல் ஆற்றில் பிணமாக மீட்பு

Published On 2018-08-28 07:04 GMT   |   Update On 2018-08-28 07:04 GMT
பாலக்காடு அருகே மாயமான போலீஸ்காரரை தீயணைப்பு வீரர்கள் யக்கிரை ஆற்றுப்பகுதியில் பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணாடி பகுதியை சேர்ந்தவர் ரினில் (வயது 42). கசபா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தார். இவரது மனைவி பேபி பிரியா.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரினில் வெகுநேரமாகியும் வரவில்லை. சந்தேகம் அடைந்த அவரது மனைவி போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விபரம் கேட்டார். பணி முடிந்து ரினில் சென்று விட்டதாக கூறினர்.

கணவர் வீடு திருப்பாததால் அவரது மனைவி அதே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் ரினிலின் செல்போன் சிக்னலை சோதனை செய்தபோது அது யக்கிரை ஆற்றுப்பகுதியில் இருப்பதை காட்டியது.

அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது செல்போன், காலணி மற்றும் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். ஆற்றில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக நம்பிய போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று மாலை முதல் காலை வரை ஆற்றில் இறங்கி தேடினர்.

வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் பெரும் சவாலாக இருந்தது. இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கப்பட்டது. அங்குள்ள தடுப்பணை அருகே ரினிலை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.

இது குறித்து கசபா சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News