செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

கேரளாவில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயம்

Published On 2018-09-03 06:08 GMT   |   Update On 2018-09-03 06:08 GMT
கேரளாவில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயமடைந்து எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். #Hanan
திருவனந்தபுரம்:

கேரளாவின் எர்ணாகுளம் தெருக்களில் கல்லூரி சீருடையில் மீன் விற்று பிரபலமானவர் மாணவி ஹனான்.

சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரவி பலரும் மாணவி ஹனானுக்கு பாராட்டு தெரிவித்தனர். முதல்-மந்திரி பினராயி விஜயனும் மாணவி ஹனானை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த நிலையில் மாணவி ஹனான் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது அவரது கார் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி ஹனான் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற ஹனான் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்துக் குறித்து மாணவி ஹனான் கூறும் போது, சாலையில் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பிய போது கார் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியது.

இதில் எனது உச்சந்தலை, கை, கால், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார். #Hanan
Tags:    

Similar News