செய்திகள்

பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - தேவேகவுடா

Published On 2018-09-04 03:09 GMT   |   Update On 2018-09-04 03:10 GMT
உள்ளாட்சி தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேவேகவுடா கூறினார். #DeveGowda
சிக்மகளூரு:

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா எகட்டி கிராமத்துக்கு நேற்றுவந்தார்.

அங்கு அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் சில மாவட்டங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள், பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம்.

கர்நாடகத்தில் தற்போது நடந்த நகர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.  #DeveGowda
Tags:    

Similar News