இந்தியா

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் காலமானார்

Published On 2024-11-01 06:14 GMT   |   Update On 2024-11-01 07:16 GMT
  • நிதி ஆயோக்கின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
  • புனேயில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட் துணைவேந்தராக பணியாற்றியவர்.

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தவர் பிபேக் டெப்ராய். 69 வயதான இவர் இன்று காலமானார். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். இவர் புனேயில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட்டின் துணைவேந்தராக பணியாற்றியவர்.

குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிபேக் டெப்ராய் சிறந்த அறிஞர் என வர்ணித்த பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் "டாக்டர். பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார், பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் மற்றும் பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார். பொதுக் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ச்சியாக பணியாற்றினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மற்றும் டெல்லியில் பள்ளிப்படிப்பை முடிநத்த பிபேக் டெப்ராய், கேம்பிரிட்ஜ்-ல் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படப்படிப்பை முடித்தார்.

2019-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி அவரை நிதி ஆயோக்கின் உறுப்பினராக இருந்தார். இவர் ஏராளமான புத்தங்கங்களை எழுத்தியுள்ளார். பல செய்தித்தாள்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

Tags:    

Similar News