செய்திகள்

ஆரவல்லி மலையில் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2018-10-23 12:35 GMT   |   Update On 2018-10-23 12:44 GMT
31 குன்றுகள் காணாமல் போன ஆரவல்லி மலைத்தொடரில் இயங்கும் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Apexcourt #illegalmining #Aravallihills
புதுடெல்லி:

வட இந்தியாவில் டெல்லியில் தொடங்கி அரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்கு பகுதிவரை ஆரவல்லி மலைத்தொடர் நீண்டு விரிகிறது. சுமார் 700 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியில் இருந்த 31 குன்றுகளை சுரங்க மாபியாக்கள் சுரண்டி எடுத்து விட்டதாக மத்திய அரசின் அதிகாரம் பெற்ற குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.



ஆரவல்லி மலையை ராஜஸ்தான் அரசு சரியாக பராமரிக்கவில்லை. இங்கு அனுமதிபெறாத சுரங்கங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. அவற்றை மூடுமாறு உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆரவல்லி மலைத்தொடரில் இயங்கும் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #Apexcourt #illegalmining #Aravallihills
Tags:    

Similar News