செய்திகள்

குஜராத் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

Published On 2018-12-23 08:17 GMT   |   Update On 2018-12-23 08:17 GMT
குஜராத் மாநிலம், ஜஸ்டன் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Jasdan #KunvarjiBavaliya #BJP
அகமதாபாத்:

குஜராத் மாநிலம், ஜஸ்டன் சட்டசபை தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் தற்போது மந்திரியாக இருக்கும் கன்வர்ஜி பவாலியா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நாக்கியா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த இந்த இடைத்தேர்தல் அம்மாநிலத்தையும் மத்தியிலும் ஆளும் பாஜகவின் கவுரவ பிரச்சனையாகவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான முன்னோட்டமாகவும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த 2.32 லட்சம் பேரில் 72 சதவீதத்தினர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. எண்னிக்கையின் ஆரம்பச் சுற்றில் இருந்தே பாஜக வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், 17 சுற்று எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளது.

கன்வர்ஜி பவாலியா 19 ஆயிரத்து 979 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அவ்சார் நாக்கியாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.


அமைச்சராக பதிவி ஏற்றுக்  கொண்டபோது எடுத்த படம்

முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கன்வர்ஜி பவாலியா இதே ஜஸ்டன் சட்டசபை தொகுதியில் 1995, 1998, 2002, 2007 மற்றும் 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் இவர் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின்னர், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் திடீரென பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் அன்றைய தினமே அம்மாநில மந்திரிசபையிலும் கன்வர்ஜி பவாலியா இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News