இந்தியா (National)
பிரதமர் மோடி

பஞ்சாப், உ.பி தேர்தல்: இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு

Published On 2022-02-20 04:22 GMT   |   Update On 2022-02-20 04:42 GMT
பிரதமர் மோடி வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல், உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்தது அவர் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப் சட்டசபை தேர்தல் மற்றும் உ.பி.யின் 3-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று வாக்களிக்கும் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

உங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி நம் ஜனநாயகத்தை நாளை என்றென்றும் மறக்கமுடியாததாக ஆக்குங்கள். வாக்களியுங்கள், பொறுப்புள்ள குடிமகனாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. ஒரே உடல் இரண்டு வாக்கு- பஞ்சாப் தேர்தலில் வாக்களித்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்

Similar News