இந்தியா (National)
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா

உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரியங்கா காந்தி

Published On 2022-02-24 13:31 GMT   |   Update On 2022-02-24 13:31 GMT
உ.பியில் உள்ள மஸ்கன்வாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் வரும் 27-ம் தேதி 5-ம் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உ.பியில் உள்ள மஸ்கன்வாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டெடுக்க மத்திய அரசு தனது வலிமையைக் காட்ட வேண்டும். மாணவர்களை மீட்டெடுக்கும் முயற்சியை மத்திய அரசு முன்பே செய்திருக்க வேண்டும். உக்ரைனில் வசிக்கும் மாணவர்களிடம் காட்டப்படும் அக்கறையின்மைக்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.

உக்ரைனில் போர் நடப்பது தெளிவாகத் தெரிகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கவலையில் உள்ளதால் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை... சண்டையில் ஏராளமானோர் பலி
Tags:    

Similar News