இந்தியா (National)
தற்கொலை செய்த அஜித்குமார், அவரது மனைவி மற்றும் மகள்கள்

நீதிமன்ற விசாரணைக்கு பயந்து மனைவி, மகள்களுடன் ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-02-27 09:33 GMT   |   Update On 2022-02-27 09:33 GMT
விசாரணைக்கு பயந்து வாலிபர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் லக்கடியை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது37). இவருக்கு விஜி(34) என்ற மனைவியும், அஸ்வநந்தா(14), ஆரியநந்த(6) என 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் 4 பேரும் திடீரென மாயமாகி விட்டனர். இதையறிந்த உறவினர்கள், பல இடங்களில் அவர்களை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் ஒற்றப்பாலம் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை பாரதப்புழா ஆற்றின் கரையோரம் வெகுநேரமாக மோட்டார் சைக்கிள் மற்றும் 4 செருப்புகள் கிடப்பதாகவும், ஆனால் யாரும் அங்கு இல்லை என்றும் தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் பவர்ஹவுஸ் பகுதியில் 4 பேர் உடல் மிதந்து கொண்டிருந்தது. உடனடியாக போலீசார் ஆற்றில் இறங்கி, பிணமாக மிதந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்தனர்.

அப்போது இறந்து கிடந்தது, மாயமான அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் ஆற்றில் தவறி விழுந்து இறந்தனரா அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அஜித்குமாரின் வீட்டிலும் ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என தேடி பார்த்தனர். அப்போது வீட்டில் ஒரு கடிதம் இருந்தது.

அதை கைப்பற்றி பார்த்தபோது, அதில், நாங்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்களை யாரும் தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அஜித்குமாரின் தற்கொலை முடிவுக்கு காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில், அஜித் குமார் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரை வருகிற மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததும் தெரியவந்ததும். விசாரணைக்கு பயந்தே அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
Tags:    

Similar News