இந்தியா

உனக்கும் எனக்கு பகை பகைதான்... விமானநிலையத்தில் 1 பாம்புடன் மோதிய 3 கீரிகள்... வீடியோ வைரல்

Published On 2024-08-12 15:56 GMT   |   Update On 2024-08-12 15:56 GMT
  • பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
  • தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

பாம்புக்கும் கீரிக்கும் இடையே தீராத பகை உள்ளது. பாம்புக்கும் கீரிக்கும் இடையேயான சண்டையை பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம்.

இந்நிலையில், உண்மையிலேயே பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது.

ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

Tags:    

Similar News