இந்தியா

திருப்பதியில் 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை

Published On 2024-10-12 14:20 GMT   |   Update On 2024-10-12 14:20 GMT
  • லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.
  • திருப்பதியில் ரூ.26 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.

லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்று வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 4 ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இக்காலகட்டத்தில் ரூ.26 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.2 கோடி அதிகமாகும்.

கடந்த 4 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை 15 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். குறிப்பாக கடைசி நாளான இன்று மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News