இந்தியா (National)

காஷ்மீரில் 12 இடங்களில் அதிரடி சோதனை

Published On 2023-05-02 10:42 GMT   |   Update On 2023-05-02 10:42 GMT
  • உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்து பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • சோதனையின் போது ஸ்ரீநகர் சோசேத் என்ற பகுதியை சேர்ந்த இசாக் அகமது பட் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, ஆயுத உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் சிலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்து பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையடுத்து இன்று காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், அவந்திபுரா, புல்வாமா, குல்காம் மற்றும் ஆனந்ததக் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை 5.30 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது ஸ்ரீநகர் சோசேத் என்ற பகுதியை சேர்ந்த இசாக் அகமது பட் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் ஜன்னல் கண்ணாடி பொருத்தும் தொழிலாளி என்பது தெரியவந்தது. அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையே தொடர்வு எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News