இந்தியா

எல்லை தாண்டிய ஊடுருவலை நிறுத்தினால் மேற்கு வங்கத்தில் அமைதி திரும்பும்: அமித் ஷா

Published On 2024-10-27 21:44 GMT   |   Update On 2024-10-27 21:44 GMT
  • 2026- ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
  • மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத குடியேற்றம் நிறுத்தப்படும் என்றார்.

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் பெர்டாபோல் சோதனைச்சாவடியில் புதிய பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தை உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது அமித்ஷா பேசியதாவது:

இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தச் சோதனைச்சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

எல்லைப் பகுதியில் சட்டரீதியாக உலவமுடியாதபோது சட்டவிரோத ஊடுருவல் அதிகமாகிறது. இது நாட்டின் அமைதியை பாதிக்கிறது.

2026- ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அதன்பின் ஊடுருவல் நிறுத்தப்பட்டு அமைதி தானாக வரும். அண்டை நாட்டில் இருந்து ஊடுருவல் நிறுத்தப்பட்டால் மட்டுமே மேற்கு வங்கத்தில் அமைதி திரும்பும்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை, இணைப்பை மேம்படுத்துவதில் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.

Tags:    

Similar News