null
ஆபீஸ் நேரம் முடிய 1 நிமிடம் முன்பே கிளம்பிய ஊழியர்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை நோட்டீஸ் வைரல்
- வேலை நேரம் முடிய 1 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது
- எல்லாரும் 5 மணிக்கு தான் வெளியேற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக 4.59 மணிக்கே கிளப்பி விடுகிறீர்கள்
சம்பளத்துக்கு ஊழியர்களிடம் முடிந்த அளவு வேலை வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப் பலர் உணர்ந்திருக்கக் கூடும். கதவோடு கைரேகை மிஷினை இணைத்து ஊழியர்களை மறைமுகமாக அறைக்குள் அடைத்து வைக்கும் போக்கு இன்றைய காலகட்டத்தில் நவீன அடிமை முறையாக பலர் கருதுகின்றனர்.
அந்த வகையில், வேலை நேரம் முடிய 1 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட்டிட் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த போஸ்டில், உங்களின் வேலை நேரம் மாலை 5 மணிக்கு முடிகிறது, ஆனால் அதுவரை நீங்கள் காத்திருப்பது கிடையாது, எல்லாரும் 5 மணிக்கு தான் வெளியேற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக 4.59 மணிக்கே கிளப்பி விடுகிறீர்கள், இது பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்ததை நாங்கள் கவனித்தோம், இனியும் இதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.