இந்தியா
ஆந்திராவில் 13-ந்தேதி தீபாவளி பொது விடுமுறை அறிவிப்பு
- வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
- விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
திருப்பதி:
தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ந் தேதியாக மாற்றி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.
ஆனால் தற்போது, பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் செயல்பாட்டில், விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.