ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்- ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
- ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- முதன்முறையாக வாக்களிக்கப் போகும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 43 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்பி கீதா கோரா உட்பட மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
முதன்முறையாக வாக்களிக்கப் போகும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 20-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதுடன், நவம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.