இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை: உமர் அப்துல்லா

Published On 2024-03-16 12:12 GMT   |   Update On 2024-03-16 12:12 GMT
  • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
  • கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தாங்க அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News