இந்தியா

ஒரு நாளைக்கு ரூ.4000 வரை சம்பாதிக்கும் பெங்களூரு கேப் டிரைவர் - வைரலாகும் பதிவு

Published On 2024-06-29 07:00 GMT   |   Update On 2024-06-29 07:00 GMT
  • சம்பளம் கேட்டு அதிர்ந்ததாக ‘ரெடிட்’ வலைத்தளத்தில் பயனர் குறிப்பிட்டுள்ளார்.
  • பதிவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியான பதிவு ஒன்று பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து பார்ப்போம்...

பெங்களூருவில் திருமண விழாவிற்கு சென்றவர் வீடு திரும்புவதற்காக காரை புக் செய்துள்ளார். கார் வந்ததும் அதில் ஏறி பயணம் மேற்கொண்டவர் அந்த கார் ஓட்டுநரிடம் சுவாரசியமாக பேசி வந்துள்ளார். அப்போது, அவரின் சம்பளம் கேட்டு அதிர்ந்ததாக 'ரெடிட்' வலைத்தளத்தில் பயனர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:-

கார் ஓட்டுநர் ஒரு நாளை ரூ. 3000 முதல் 4000 வரை சம்பாதிப்பதாகவும், இதுபோக கூடுதலாக, அவர் ஓலாவுடன் இணைக்கப்பட்ட மற்றொரு வண்டியை வைத்திருக்கிறார். அது கூடுதல் வருமானத்தை தருவதாக கூறியுள்ளார். இதனால் தன் குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள் என்று பெருமையுடன் கூறும் , அவர் 2019-ம் ஆண்டு முதல் காரை ஓட்டுவதாக தெரிவித்தார். மேலும், ஒரு நாளைக்கு 3000 சம்பாதித்து, ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வேலை செய்தால், அது ஒரு மாதத்திற்கு ரூ.75,000 ஆகும். பெட்ரோல், EMI மற்றும் இதர செலவு போக தன்னிடம் போதுமான பணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "இது மிகவும் நியாயமானது மற்றும் நம்பக்கூடியது. எனக்கு நெருங்கிய நண்பரின் சகோதரர் ஒருவர் ஓலா ஓட்டுநராக பணிபுரிகிறார். அவர் வழக்கமாக விமான நிலையம் அல்லது ரெயில் நிலையம் பிக்-அப்களில் மட்டுமே கவனம் செலுத்துவார். சிறிது நேரம் வேலை செய்கிறார். ஆனால் செலவுகளுக்குப் பிறகு வீட்டிற்கு ஒரு தொகையை கொண்டு வருகிறார்" என்று எழுதினார்.

Tags:    

Similar News