இந்தியா

படுக்கை வசதியுடன் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம்

Published On 2024-08-02 04:28 GMT   |   Update On 2024-08-02 04:53 GMT
  • மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லை.
  • உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வருவார்.

திருப்பதி:

ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லை.

இதனால் மலை கிராம மக்கள் வசதிக்காக ஆந்திர மாநில அரசு படுக்கை வசதியுடன் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியுள்ளது.

பைக்குடன் பொருத்தப்பட்ட நோயாளி படுக்கும் வகையில் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் பிற அடிப்படை மருத்துவ வசதிகள் இதில் உள்ளன.

மலைப்பகுதிகள் மற்றும் குறுகலான சாலைகள் கொண்ட பகுதிகளுக்கு பைக் ஆம்புலன்ஸ் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு பைக்கை ஓட்டி செல்லும் மருத்துவ உதவியாளர் முதலுதவி சிகிச்சை அளிப்பார்.

பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வருவார். இந்த ஆம்புலன்ஸ் சேவை தற்போது பார்வதிபுரம் மானியம், விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜ் ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது இந்த சேவை இருந்தது.

Tags:    

Similar News