இந்தியா

கர்நாடக அரசை கண்டித்து பாராளுமன்ற காந்தி சிலை முன் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

Published On 2024-02-07 06:23 GMT   |   Update On 2024-02-07 06:23 GMT
  • கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பாஜக குற்றச்சாட்டு.
  • மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட முயற்சிக்கும் காங்கிரஸ் அரசால் கூட்டாட்சி அமைப்பு சீர்குலைந்துள்ளது.

கர்நாடகவில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பாஜக கட்சி குற்றச்சாட்டு கூறி வருகிறது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் இன்று நடத்தப்பட உள்ள போராட்டம் குறித்த விளம்பரங்களுக்கு அரசின் பொதுநிதி பயன்படுத்துவதை கண்டித்தும் கவர்னரிடம் பாஜக மனு அளித்தது.

மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட முயற்சிக்கும் காங்கிரஸ் அரசால் கூட்டாட்சி அமைப்பு சீர்குலைந்துள்ளது என்றும் பாஜக குற்றம் சாட்டியது.

மேலும் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பாஜக இது உண்மையில் மாநில அரசின் போராட்டம் அல்ல. இது காங்கிரஸ் கட்சியின் போராட்டம் எனக் கூறியது.

மத்திய அரசுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் விளம்பரங்களை வெளியிடுவதற்கு மக்கள் பணத்தை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இதுநெறிமுறைகள் மற்றும் சட்டத்தை மீறும் செயல்

என பாஜக குற்றம்சாட்டியது.

இந்தநிலையில் மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்கு பொதுநிதியைப் பயன்படுத்துவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இன்று பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தினார்கள். கர்நாடக மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் கூறியதாவது:-

கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசு மாநில நிதியை கட்சி போராட்ட விளம்பரங்களுக்கு தவறாக பயன்படுத்தி வருகிறது.

கர்நாடக மாநில முதல்- மந்திரி ஒரு முதல்-அமைச்சராக இருப்பதை விட காங்கிரஸ் பிரமுகரைப் போல நடந்து கொள்கிறார். எனவே இதை கண்டிக்கும் விதமாக கர்நாடக பாஜக எம்பிக்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ள காந்திசிலை முன்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News