இந்தியா

துருவ் ரத்தி மீது பாஜக தலைவர் அவதூறு வழக்கு.. நீதிமன்றம் சம்மன்

Published On 2024-07-24 08:24 GMT   |   Update On 2024-07-24 11:37 GMT
  • துருவ் ரத்தியின் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
  • ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

பிரபல யூடியூபர் துருவ் ரத்தி தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருடைய வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

இந்நிலையில், ஜூலை 7 அன்று 'கோடி யூடியூபர்களுக்கு என்னுடைய பதில்' என்று ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், என்னை வன்முறையாளர் என்று தவறாக ட்ரோல் செய்ததாக துருவ் ரத்தி மீது பாஜகவின் மும்பை பிரிவின் செய்தித் தொடர்பாளர் நகுவா டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு நீதிபதி குஞ்சன் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக துருவ் ரத்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

Similar News