ராகுல் காந்தி யாத்திரையில் மோடி கோஷம் எழுப்பிய பா.ஜ.க.வினர் - அவர் என்ன செய்தார் தெரியுமா?
- பா.ஜ.க. ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் சலசலப்பை ஏற்படுத்தியது.
- ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்று திரண்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் "மோடி-மோடி" என கோஷமிட்டனர். இதை கேட்டு நடைபயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி, கோஷம் எழுப்பியவர்களுக்கு காற்றில் முத்தங்களை பறக்க விட்டார்.
பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பா.ஜ.க.-வை சேர்ந்த முகேஷ் தூபே தலைமையிலான ஆதரவாளர்கள் ராகுல் காந்தியை நோக்கி "மோடி-மோடி" என்ற கோஷங்களை எழுப்பினர்.
எனினும், அவர்களிடம் கைகுலுக்கி, பேச முற்பட்டார் ராகுல் காந்தி. அப்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். சிறிது நேரம் அங்கிருந்த ராகுல் காந்தி அதன்பிறகு தனது வாகனத்தில் ஏறி அவர்களை நோக்கி வணக்கம் தெரிவித்து, கிளம்பும் முன் மீண்டும் ஒருமுறை முத்தங்களை காற்றில் பறக்க விட்டார்.