பாஜக-வின் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின்போது பிரிட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர்- கார்கே
- நாளுக்கு நாள் பாஜனதாவின் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
- இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை ஒத்திருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது-
பிரதமர் மோடி- அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது
1942-ல் இந்தியனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி- அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்
வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா?
மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். வாடை வீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவின் வாய்ப்பு இறங்கி கொண்டே வருகிறது. இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.