இந்தியா

ராகுலை சந்தித்ததன் மூலம் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா போராட்டம் அரசியல் உள்நோக்கம் என்பது நிரூபணம்- பாஜக

Published On 2024-09-05 04:00 GMT   |   Update On 2024-09-05 05:46 GMT
  • வினேஷ் போகத், பஜ்ரங் புனியா நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
  • அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ர்ங் புனியா சந்திப்பு மூலம் கடந்த வருடம் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின்போது நமது விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அன்று ஆரம்பித்தது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் (மல்யுத்த வீரர்கள்) காங்கிரஸிடம் சீட்டு கேட்கிறார்கள். இதன் பொருள் ஒரு இணைப்பு உள்ளது என்பதாகும். அப்போது அது தெளிவாக இல்லை என்றால், இப்போது அது முற்றிலும் தெளிவாக உள்ளது.

இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங்கிங்கு எதிராக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷன் இளம் ஜூனர்ய மல்யுத்த வீராங்கனைகளுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News